Wednesday, January 23, 2013

நான் இரசித்த குறும்படங்கள் - 07 "Love Language"

 நான் இரசித்த குறும்படங்கள் - 07 "Love Language"

ஒரு குறும்பட இரசிகனாக பல குறும்படங்களை நான் ரசித்திருப்பினும் சில குறும்படங்கள் மட்டும் என்று மறக்காது, நான் பெற்ற இவ் இனிய அனுபவத்தை மற்றவர்களுக்கும் கொடுப்பதுதான் இந்த வலைப்பூவின் நோக்கம்,

நான் இரசித்த இன்னுமொரு காதல் குறும்படம் -  "Love Language"

நான் இரசித்த குறும்படங்கள் -6

நான் இரசித்த குறும்படங்கள் -5

நான் இரசித்த குறும்படங்கள் - 4

நான் இரசித்த குறும்படங்கள் - 3

நான் இரசித்த குறும்படங்கள் - 2

நான் இரசித்த குறும்படங்கள் -1

Tuesday, December 18, 2012

மனித அறிவை அளக்கும்

வயிரு,பாலுறுப்பு
இது ரெண்டும் இல்லாட்டி
பூமி சொர்கமா இருந்துருக்கும்

.............................................................................................................................................................

வருடம் தோறும் வயதுகள் வந்தாலும்,
பெண் ஒரு முறைதான்
வயதிற்கு வருகிறாள்

..........................................................................................................................................................

மனிதனின் தத்துவங்களையும்
மிஞ்சிவிடுகின்றன
மரங்களின் மௌனம்

....................................................................................................................................................

கடுகு சிறுத்தாலும் காரம் பெருசாமே,
கடுகு என்ன அவ்லோ காரமா? #டவுட்டு

 ...................................................................................................................................................

மனித அறிவை அளக்கும் கருவி
இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை.
எக்ஸாம் வைப்பதென்பதும் ஏமாற்றுவேலையே

 ............................................................................................................................................................

நாம பூமியில பொறக்காம
சனி கிரகத்துல பொறந்திருந்தா
நைட்ல 61 நிலாவ பாத்துருக்கலாம்

.................................................................................................................................................................

மழையில் மலரும் வண்ணப் பூ - குடை

...............................................................................................................................................................

மறக்காமல்
குடை எடுத்துப் போகும் நாட்களில்
தவறியும் பெய்வதில்லை மழை

...........................................................................................................................................................

காதலியின் பெயரை
கையில் எழுதிப்பார்த்துப்
பரவசப்பட்டுக்கொள்கிறது
பள்ளிக் காதல்

..........................................................................................................................................................

நகரத்தை போல் அல்லாமல்,
கிராமங்களில் மாலை ஆறு மணிக்கே
இரவு தொடங்கி விடுகிறது

.......................................................................................................................................................

கரண்டியில் சோறு சாப்பிடும் போது
நிறைவது வயிறு மட்டுமே

...........................................................................................................................................

எல்லா மேனேஜரும் சீட்ல உக்காரும்போது மூளையக்கலட்டி ஒரு ஓரமா வச்சுருவாங்க போல‌  #முடியல

Tuesday, December 11, 2012

யானை மல்லாந்து படுத்திருப்பது போல்...........

ஓசோன் படலத்துல ஓட்ட போட்டது
நீல் ஆம்ஸ்ரோங்ட ராக்கேட்னு
சின்னவயசுல நம்பிக்கிட்டு இருந்தேன்

 .................................................................................................................................................................

"படித்ததில் எனக்கு பிடித்தது,.
வியாபாரியுடன் நண்பனாக இரு.....
நண்பனிடம் வியாபாரியாக இருக்காதே.

....................................................................................................................................................................

வீரன் வீழலாம் ஆனால் பணியமாட்டான்
பைந்தமிழ் பழமொழி

 ..................................................................................................................................................................

அஞ்சினவனைத் தன் குஞ்சும் விரட்டும்
பைந்தமிழ் பழமொழி

 ...................................................................................................................................................................

பொதுவா எல்லா பொண்ணுங்களும் சொல்லுர வசனம்:
"நா மத்த பொண்ணுங்காமாதிரி
ஓவரா மேக்கப் பன்னுரதில்ல"

....................................................................................................................................................................

யானை மல்லாந்து படுத்திருப்பது போல் உள்ளது "ய" என்ற எழுத்து

....................................................................................................................................................................

பெண்: வேகமா நகம் வளரனும்னு ஆசைப்படுவாள்.
ஆண்: நகமே வளரக்கூடாதுனு ஆசைப்படுவான்
ஆனா ரெண்டுமே மாறித்தான் நடக்கும்

.................................................................................................................................................................

வேகமாக கூட்டல் கணக்கு போடக்கூடியவர்கள்
அதிகம் படித்திராத மலிகைக்கடைக்காரர்கள் என நினைக்கிறேன்

....................................................................................................................................................................

படித்ததில் பிடித்தது: கவிஞர்களின் சோம்பலுக்கு பிறந்திருக்கலாம் ஹைக்கூ

................................................................................................................................................................

இப்போது அணியப்படுகிற இந்த ஆடை என்பது
தோல்,மரவுரி,இலைதழை என்பதன் நவீன வடிவம் - வைரமுத்து

..............................................................................................................................................................

திறந்து மூடும் ஒரு அதிசய சிப்பிக்குள் இருக்கும்
கருப்பு முத்து அவள் கரு விழிகள்

................................................................................................................................................................
Blogger Widgets