Tuesday, December 11, 2012

யானை மல்லாந்து படுத்திருப்பது போல்...........

ஓசோன் படலத்துல ஓட்ட போட்டது
நீல் ஆம்ஸ்ரோங்ட ராக்கேட்னு
சின்னவயசுல நம்பிக்கிட்டு இருந்தேன்

 .................................................................................................................................................................

"படித்ததில் எனக்கு பிடித்தது,.
வியாபாரியுடன் நண்பனாக இரு.....
நண்பனிடம் வியாபாரியாக இருக்காதே.

....................................................................................................................................................................

வீரன் வீழலாம் ஆனால் பணியமாட்டான்
பைந்தமிழ் பழமொழி

 ..................................................................................................................................................................

அஞ்சினவனைத் தன் குஞ்சும் விரட்டும்
பைந்தமிழ் பழமொழி

 ...................................................................................................................................................................

பொதுவா எல்லா பொண்ணுங்களும் சொல்லுர வசனம்:
"நா மத்த பொண்ணுங்காமாதிரி
ஓவரா மேக்கப் பன்னுரதில்ல"

....................................................................................................................................................................

யானை மல்லாந்து படுத்திருப்பது போல் உள்ளது "ய" என்ற எழுத்து

....................................................................................................................................................................

பெண்: வேகமா நகம் வளரனும்னு ஆசைப்படுவாள்.
ஆண்: நகமே வளரக்கூடாதுனு ஆசைப்படுவான்
ஆனா ரெண்டுமே மாறித்தான் நடக்கும்

.................................................................................................................................................................

வேகமாக கூட்டல் கணக்கு போடக்கூடியவர்கள்
அதிகம் படித்திராத மலிகைக்கடைக்காரர்கள் என நினைக்கிறேன்

....................................................................................................................................................................

படித்ததில் பிடித்தது: கவிஞர்களின் சோம்பலுக்கு பிறந்திருக்கலாம் ஹைக்கூ

................................................................................................................................................................

இப்போது அணியப்படுகிற இந்த ஆடை என்பது
தோல்,மரவுரி,இலைதழை என்பதன் நவீன வடிவம் - வைரமுத்து

..............................................................................................................................................................

திறந்து மூடும் ஒரு அதிசய சிப்பிக்குள் இருக்கும்
கருப்பு முத்து அவள் கரு விழிகள்

................................................................................................................................................................

No comments:

Post a Comment

Blogger Widgets