Tuesday, November 27, 2012

கொசுவ கொள்ளுரது பாவமா??????

காதல்வயப்படுவதுபோல காதல் தோல்வியும்
ஒருவகை போதையே
அதை அனுபவிக்காதவர்களுக்கு என் அனுதாபங்கள்

 ............................................................................................................................................................

வேலை முடிந்து வீடு வரும்போது
மழை பெய்தால் ரசிக்க மட்டுமே முடியும்.
கையில் நவீன சிறைச்சாலை #mobile phone

..............................................................................................................................................................

 Call summary:
Boy to boy=00:00:59
Boy to mom=00:10:30
Boy to dad=00:02:36
Boy to girl=01:15:01
Girl to girl=00:29:59
Girl to boy=00:00:05

................................................................................................................................................................
................................................................................................................................................................

காதல் தோல்வியை விட வலிமிக்கது
சிறுவயதில் ஸிப் மாட்டிக்கொண்டது
 ..............................................................................................................................................................

தண்ணிய கொதிக்க வச்சா
அதுல உல்ல கிருமி எல்லாம் செத்துரும்னா
அந்த தண்ணிய குடிச்சா
செத்த கிருமி எல்லாம் வயுத்துக்குள்ள போகாது? #டவுட்டு

................................................................................................................................................................

இஞ்ஜினியர்னா பஸ்சுக்கு அடியில படுத்துக்கிட்டு 
இஞ்ஜின் ரிப்பேர் பன்னுரவங்கனு 
சின்ன வயசுல நெனச்சன்

................................................................................................................................................................

உலகத்துலயே ரொம்ப லேசான வேலனா,
அது அரச வைத்தியசலைல இருக்குற
மருந்து குடுக்குரவர்ட வேலதான், எல்லா நோய்க்கும் அதே மூனு மருந்து

.................................................................................................................................................................

உணவுக்காக தன் உயிரயே பணயம் வைப்பதால்
கொசுவும் சிறந்த போராளியே #நான் - கொசு

.................................................................................................................................................................

கொசுவ கொள்ளுரது பாவமா அண்ணா? - நான் இதுவரையில் பதில் தேடும் ஒரு சிறுமியின் கேள்வி

..................................................................................................................................................................

அழகான பெண்களுக்கு இருக்கும் அளவான திமிரும் அழகுதான்

^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^

குறிப்பு : இவை அனைத்தும் நான் @wathsalan என்ற பெயரில் நான் எழுதிய ட்வீட்டுக்கள், என் எழுத்துப் பிழைகளை சுட்டிக்காட்டினால் உங்களை குருவாக மதிப்பேன்

Friday, November 16, 2012

அறிமுகம்

யார் யாரோ எழுதுராங்க நா எழுதக்கூடாதா நு நா ஆரம்பிச்ச பெரு முயற்சிதாங்க இது
(நீ எழுதுனா யாராவது படிக்கனுமே நு நீங்க மனசுக்குள்ள சொல்லுரது எனக்கு கேக்குது, சரி சரி ஏதோ ஒரு ப்லோல எழுத ஆரம்பிச்சிட்டேன் விட்டுத்தள்ளுங்க).
ஜஸ்டின் சாம் (Justin Sam) என்னோட உண்மையான பெயர் இது என்னோட அம்மா அப்பா எனக்கு ஆசையா வச்ச பேரு (நமக்கெல்லாம் பக்கத்துவீட்டுக்காரனா பேரு வச்சான் அடங்குடா!)
இந்த ஒலகத்துல ஒன்னுமே ஒனக்கு சொந்தமில்ல இந்த பெயர் கூட ஒனக்கு சொந்தமில்லனு எங்கயோ படிச்ச ஞாபகம் அதனால ஒரு நல்ல பேரா தேடுனபோதுதான் ”வத்சலன்”ங்குர அருமையான(!) பெயர் எனக்கு கெடச்சது எடுத்து வச்சிக்கிட்டன்.
(இந்த மொக்க பெயர எங்கருந்து பொருக்குன இதுக்கு என்ன அர்த்தம் எல்லாம் கேக்கப்படாது. அத இன்னொரு பதிவாப்போடுரேன் (இன்னொருப்பதிவாஆஆஆஆ.......) இது என்னோட மொதலாவது கன்னிப்பதிவு (ரெண்ணுமே ஒன்னுதாண்டா!) இந்த பதிவோட நா பதிவுலகுங்குர கடல்ல குதிக்கப் போரேன் (ஒனக்குத்தான் நீச்சல் தெரியாதேடா) இந்த சிறுவன ஒங்கள்ல ஒருத்தனா ஏத்து என்னோட பிஞ்சுமனச குளிர வைக்கனும். இதுக்கு மேல எனக்கு எழுத வார்த்த வரல (எழுதத்தெரியானு சொல்லுடா!)

ஆ....... ஒரு முக்கியமான மேட்டர மறந்துட்டனே எதாவது புக்ல இல்லாட்டி ப்ளாக்ல படிக்கும் போது, இந்த மேட்டர ஏற்கனவே வத்சலன் சொல்லிட்டாரே... இந்த புக்கு இல்லட்டி ப்ளாக்கு ஒருவேல வத்சலன் ப்ளாக்ல காப்பியா இருக்க்குமோனு ஒன்னும் கொழம்பவேண்டிய அவசியமே இல்ல, நீங்க படிக்க்கிற புக்கு/பிளாக்கு தான் ஒரிஜினால் நான் டூப்புங்கோ......................

குறிப்பு:
கருத்துப்பிழை மற்றும் எழுத்துப்பிழைகளுக்கு வத்சலன் மட்டுமே பொறுப்பு.
Blogger Widgets